Pookaalam | பூக்காலம்

By Admin - 12 Oct 2026 13 0

நான் என்ன எழுதுவது யாரை பற்றி எழுதுவது எதை பற்றி எழுதுவது என்று புரியாமல் கம்ப்யூட்டர் முன்னால் உட்கார்ந்து இருக்கையில் எங்கிருந்தோ ஒரு அருமையான பாடல், தேவாங்கணங்கள் தேவலோகம் விட்டு பூமியில் கிட்டார் மீட்டி பாடுவது போல அவளின் குரல் என்னை சுண்டி இழுத்தது. என்னை அறியாமல் நான் எழுந்து பால்கனி நோக்கி சென்றேன். குரலின் திசை தேடி என் கண்கள் அவளை தேடி கொண்டிருந்தது. திடிரென்று அந்த பாட்டும் நின்றது! நான் தேவாங்கணத்தின் மாயையிலிருந்து விடுபட்டேன்! நிதானத்திருக்கு வந்து பிறகு தான் தெரிந்தந்து நான் சந்தியா நேரத்தில் இருந்திருக்கின்றேன் என்று! எதிர் பால்கனியில் உள்ள ஒரு பாட்டி என்னை பர்த்து தலையில் அடித்துக்கொண்டிருந்தது!  என்ன என்று புரியாமல் பால்கனியை சுற்றி பார்த்தபொழுது தான் தெரிந்தது வாஷ் பேசின் கண்ணாடியில் நான் நிர்வாணமாக நின்று கொண்டிருந்தேன் என்று!! கூச்சத்தின் உச்சியில் ஓடி வந்து எனது அறையில் ஒளிந்துகொண்டேன்! என்ன செய்வது என்று தெரியாமல் மௌனமாக எனக்குள் சிரித்துக்கொண்டேன்! யார் யார் பார்த்தர்களோ என்ற பயம் மறந்து அந்த குரலின் நினைவாக அது யாராக இருக்கும் என்று ஏங்க தொடங்கினேன்!  

மறுநாள் நான் காய்கறி வாங்க அந்த அடுக்கு மாடி குடியிருப்பின் சூப்பர் மார்க்கெட்டில் சுற்றி கொண்டிருந்தேன். வழக்கம் போல என்ன வாங்குவது என்று புரியாமல் அலைந்து கொண்டிருந்தேன் எதிர் பால்கனியில் பார்த்த பாட்டி அங்கே என்னை கண்டும் காணாதது ஒதுங்கி ஓடிகொண்டாள்! நானும் சிரித்துக்கொண்டு முருங்கக்கை பக்கம் சென்றேன் சில முருங்கை எடுத்துக் கொண்டிருக்கையில் மறுபடியும் அந்த தேவாங்கனத்தின் பாடல், கால்கள் தளர்ந்தது  கண்கள் விரிந்தது இதய துடிப்பு வேகமானது கையில் இருந்து காய்கறி பை கிழே வீழ்ந்தது! நான் அவளை கூட்டத்தில் எல்லோரையும் விரட்டி தேடிக்கொண்டு முன்னே சென்றேன்! வெள்ளை நிற கை இல்லா சட்டை மற்றும் வெள்ளை நிற லெனின் பாண்டும் போட்டிருந்தாள் முகத்தை அழகான வெள்ளை நிற மாஸ்க்கும் அணிந்திருந்தாள். நான் கூட்டத்தை விலக்கி வருவதை திரும்பி பார்த்த பொழுது அவளது அழகிய பச்சை நிற கண்கள் என்னை பார்த்து மின்னியது! நொடி பொழுதில் என்னை பார்த்தபொழுது அவள் மாயமாய் காற்றாக மறைந்து விட்டாள்! கேஷியர் இதை பார்த்து பதறினார் எல்லோரும் ஒரு நொடி பதறி போக நான் மட்டும் வேகமாக அவளை தேடி வெளியே ஓடி சென்றேன்!! வெளியே அந்த அடுக்குமாடியின் மடியில் அவள் நின்றுகொண்டு  கையில் உள்ள வாட்சில் ஒரு பட்டனை தட்ட மேகதில்ருந்து ஒரு வெளிச்சம் கீழ்நோக்கி வந்தது! நான் லிஃப்டில் பதறி கொண்டு ஏறினேன்! வெளியே வந்த பொழுது அவள் தேவதைகள் அணியும் ஆபரணங்கள் அணிந்து கொண்டு தேவதை போல் நின்றுகொண்டிருந்தாள். அவளது மாஸ்க் இல்லா முகத்தை முதல் முறை பார்த்த நான் முதல் முறை அவளை காதலிக்கவும் எண்ணினேன்! அந்த கோதுமை நிற தேவதை பச்சை கண்கள் என்னை கிறங்க செய்தது! அந்த மேக வெளிச்சம் அவளை முழுவதுமாக மூடிக்கொள்ள் அவள் பறக்க தொடங்கினாள்! பதறிக்கொண்டு நான் அவளை நோக்கி ஓடினேன் அந்த வெளிச்சம் என் மீது பட்டவுடன் நான் பறக்க தொடங்கினேன் நானும் அவளுடன் பறக்க அவள் என்னை பாசமாக பார்த்து மானிடா இது உணக்கான உலகம் அல்ல என்று கூற நான் இனி முதல் நீற் இருக்குமிடமே எனக்கு உலகம் தேவி என்று கூற அவள் என்னை பார்த்து சிறித்துக்கொண்டாள் சடாலென்று ஒரு வெள்ளை வெளிச்சம் முழுவதுமாக என் கண்களை நிரப்பியது! 

மீண்டும் கண் விழித்து பார்த்தபொழுது நான் உங்க கூட போலீஸ் ஸ்டேஷன்ல உட்கார்ந்திருக்கேன் சார்! அந்த பொண்ணு எங்க சார்? நான் எப்படி சார் இங்க வந்தேன்? என்னை யாரு சார் கூட்டிகிட்டு வந்தா?

யோவ் எங்கிருந்து யா இவன புடிச்சு வந்தீங்க? யாரு யா இவன புடிச்சு வந்தா? 

சார் நைட் டியூட்டி ரோந்து முடிச்சு வந்தப்போ ஜெயில தூங்கிகிட்டுயிருந்தான் சார்! இங்க யாரும் அவன ரிமாண்ட் பண்ணல சார்!!

எங்கோ ஒரு 10,000 ஒளி ஆண்டு அப்புறம் அந்த விண்கலத்தில் அந்த பச்சை கண்ணுள்ள அந்த அழகு தேவதையை பார்த்து அவளது தோழி,

ஏண்டி அவனை திரும்பவும் உலகத்தில் விட்டிட்டு வந்துட்டே? பார்க்க நல்லா தானே இருக்கான்!! இங்க உனக்கு துணையாய் வச்சிருக்கலாம்லே! 

வேணாம் டி இங்க நாம் சமமாக வாழ்ந்துட்டு இருக்கோம் இங்க ஆண் பெண் வேற்றுமை இல்ல!! ஆனா அந்த உலகமிருக்கே காதல் அன்பு பண்பு கடவுள் மதம் கலாச்சாரம் மண்ணு மட்டைன்னு சொல்லி நம்மல அடிமையாக்கிடும்! உனக்கு சொன்ன புரியாது நான் ஒரு மாசம் தான் அங்க ட்ரைனிங்க்கு இருந்திருப்பேன்! அதுக்கே எனக்கு கண்ண கட்டிடிச்சு! இதுல இவன் வேற!! அவன் எப்போ தேவின்னு சொன்னானோ அப்போவே முடிவு பண்ணிட்டேன் இவன் சரி பட்டு வரமாட்டான்னு!! 

என்று சொல்ல அவள் தோழி சிரித்துக்கொண்டு கடிந்துகொண்டாள்! 

உனக்கு வேணம்னா எனக்காவது கொடுத்திருக்கலாம்ல நான் ஒரு நாய் குட்டி மாதிரி வளர்த்திருப்பேன்ல!! 

இங்கே அடுக்கு மாடி குடியிருப்பின் பால்கனியில் அவன் கையில் கிட்டாருடன், 

பூக்காலம் வன்னு பூக்கலாம்.. 
தேன்னுண்டோ துள்ளி தேன்னுண்டோ.. 

பூத்தும்பி செல்ல பூத்தும்பி.. 
ச்சூடுண்டோ நெஞ்சில் ச்சூடுண்டோ..

என்ற மலையாள பாட்டை அன்று அவள் பாடியது போல பாடிக்கொண்டிருந்தான். எதிரில் பாட்டி மீண்டும் இவனை பார்த்து தலையில் அடித்துக்கொண்டாள்.

இவன்,
சிவராஜ் பரமேஸ்வரன் 

Add Your Comments

Say Something

 

Comments

No comments.